அஞ்சல் துறையில் தமிழில் பாராட்டு சான்றிதழ்: எம்.பி .வெங்கடேசன் வரவேற்பு
அஞ்சல் துறை வரலாற்றில் முதல் முறையாக தமிழில் பாராட்டு சான்றிதழ் அஞ்சல் தமிழுக்கு கிடைத்த அடுத்த வெற்றி எனவும், இதனை வரவேற்பதாகவும் மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: அஞ்சல் அலுவலக பணி விடைகள் மணிஆர்டர் சிறுசேமிப்பு படிவங்கள் ஸ்மல் சவிங்ஸ் பார்ம் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே இருப்பதை சுட்டிக்காட்டி இந்திய ஆட்சி மொழி சட்டங்களின் படி மாநில மொழிக்கான உரிமைகளைப் பறிப்பது அனுமதிக்க முடியாது சட்டத்தை மீறி இந்தி திணிக்கப்படுவதை ஏற்க மாட்டோம் என்பதை அமைச்சகத்துக்கு உறுதி படைத்த தெரிவித்தோம். அனைத்து படிவ்ங்களும் தமிழில் கிடைக்க வேண்டுமென வலியுறுத்தினோம்.
அதனை அடுத்து சென்னையில் தலைமை அஞ்சல் பொது மேலாளரை சந்தித்து அஞ்சல் துறையில் பயன்படுத்தப்படும் அனைத்து படங்களும் தமிழில் இருக்கும் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தார். ஆட்சிமொழி சட்ட விதிகள் முறையாக பின்பற்றப்பட என உறுதியளித்தார். அதன் அடிப்படையில் தமிழகத்தில் இயங்கும் 14,000 அஞ்சலகங்கள் தமிழ் படிவங்கள் விரைந்து அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தனர் .தற்போது பல அஞ்சலகம் எங்களுக்கு தமிழில் அச்சடிக்கப்பட்ட படிவங்கள் அனுப்பி வைக்கப்பட்டு கிடைத்துள்ளன. அதனை பலரும் மிகுந்த மகிழ்ச்சியோடு பகிர்ந்து வருகின்றனர். தற்போது அடுத்த கட்ட வெற்றி கிடைத்துள்ளது
அஞ்சல் துறை ஊழியர்களுக்கு துறை ரீதியாக வழங்கப்படுகிற பாராட்டு சான்றிதழ் இதுவரை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது ஆனால் தற்போது அஞ்சல் துறை வரலாற்றில் முதல்முறையாக தமிழ் முதன்மை மொழியாக அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. அஞ்சல் தமிழுக்கு கிடைத்த அடுத்த கட்ட வெற்றி என வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu