பெண்ணை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்தவர் மீது வழக்கு பதிவு

பெண்ணை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்தவர் மீது வழக்கு பதிவு
X
முதல் திருமணத்தை மறைத்து இரண்வாது திருமணம் செய்த நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பெண்ணை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மதுரை ஜெயந்திபுரம் பகுதி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் வயது 35 இவர் திருமணமான முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக கூறி மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த (பெயர் மாற்றம்) உமா இவரை 2019இல் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ராமசந்திரன் வீட்டுக்கு வராத நிலையில் சந்தேகம் ஏற்பட்டது .இது தொடர்பாக உமா உறவினர்களிடம் விசாரித்தபோது ராமசந்திரன் முதல் மனைவியுடன் வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உமா அவரை விவாகரத்து செய்து விட்டதாக பொய்யான தகவலை தெரிவித்து உமாவை திருமணம் செய்தது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து உமா மதுரை தெற்குவாசல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் .புகாரின் அடிப்படையில் போலீசார் ராமச்சந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: ஈரோட்டில் 170 பேர் கைது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்