மதுரை மீனாட்சி கோயிலில் அர்ச்சகர் பள்ளியில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

மதுரை மீனாட்சி கோயிலில் அர்ச்சகர் பள்ளியில் ஆசிரியர் பணிக்கு  விண்ணப்பிக்க அழைப்பு
X

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்.

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிக்கு தலைமை ஆசிரியர், ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முக்கியமாக விண்ணப்பதாரர்கள் தமிழில் முதுநிலைப் பட்டமும், பட்டதாரி ஆசிரியர் பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.

இந்து சமய இலக்கியங்களிலும் தமிழக கோயில்கள் வரலாற்றிலும் கற்றறிவு இருக்க வேண்டும். பல்கலை, மேல்நிலைப்பள்ளியில் ஏதேனும் ஒன்றில் ஆசிரியராக குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் முக்கியமாக தேவை. தலைமையாசிரியருக்கு மாதம் ரூ .35 ,ஆயிரம் ஆசிரியருக்கு ரூ .30 ஆயிரம் தொகுப்பு ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 1ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 35 வயது நிரம்பிய ஹிந்துவாகவும், சைவ சமயக் கோட்பாடுகளை கடைபிடிப்பவர் ஆகவும் இருக்க வேண்டும். நியமனங்கள் தேர்வு குழுவின் முடிவுக்கு உட்பட்டது. விண்ணப்ப படிவத்தை கோயில் அலுவலகத்தில் பெறலாம்.

இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப கட்டணம் கிடையாது. விண்ணப்பங்களை இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் மற்றும் தக்கார் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மதுரை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Tags

Next Story
ai in future agriculture