இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சாகச பயணம் செய்த சிறுவர்கள்: அதிர்ச்சியில் பொதுமக்கள்

இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சாகச பயணம் செய்த சிறுவர்கள்: அதிர்ச்சியில் பொதுமக்கள்
X

மதுரை காந்தி மியூசியம் பகுதியில்  இரு சக்கர வாகனத்தில் பயணித்த நான்கு சிறுவர்கள்

மதுரை காந்தி மியூசியம் பகுதியில் 4 சிறுவர்கள் இருசக்கர வாகனத்தில் சாகச பயணம் செய்வதை தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மதுரை தல்லாகுளம் பகுதியில் சிறார்கள் இருசக்கர வாகனத்தில் சாலையில் சாகச பயணம் செய்தது அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் 18 வயதுக்கு குறைந்தவர்கள் பாதுகாப்பற்ற முறையில் வாகனங்களை இயக்குவதால் விபத்துக்கள் ஏற்படுவது அதிகரித்து வருவதை தொடர்ந்து தமிழக அரசு மூலம் விதிமுறைகள் கடுமையாக் கப்பட்டு உள்ள நிலையில், மதுரையில் ஒரு வாகனத்தில் சிறுவர்கள் 4 பேர் பயணித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

அதன்படி, உரிய ஓட்டுனர் உரிமம் இல்லாத 18வயதுக்கு குறைவான சிறார்களை மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 4 இன்படி 18 வயதுக்கு குறைவான ஒருவர் பொது இடத்தில் வாகனத்தை ஓட்டக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது .இதனை மீறி சிறுவர்களுக்கு வாகனத்தை ஓட்ட அனுமதி அளிக்கும் பெற்றோர் அல்லது வாகன உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரை காந்தி மியூசியம் பகுதியில் நான்கு சிறுவர்கள் ஒரே இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாகவும், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை ஓட்டியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பெரும் விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதால் போக்குவரத்து துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து சிறார்களுக்கு இருசக்கர வாகனத்தை இயக்க அனுமதி அளிக்கும் பெற்றோர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


Tags

Next Story