குடிமைப்பொருள் மண்டல மேலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

குடிமைப்பொருள் மண்டல மேலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
X

சோதனை நடந்த வீடு. 

மதுரையில், தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் துறை மண்டல மேலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் துறையின் மதுரை மண்டல மேலாளராக பணியாற்றி வரும் சுகுமார். மதுரை சாத்தமங்கலம் விநாயகமூர்த்தி தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகிறார். இவர் நெல்லை பாளையங்கோட்டை அன்பு நகர் பகுதியை சேர்ந்தவர். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல், 2020 ஆம் ஆண்டு வரை தூத்துக்குடி மாவட்ட கலால் துறை உதவி ஆணையராக பணியாற்றி வந்துள்ளார்.

அப்போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் வருமானத்திற்கு அதிகமாக 50 லட்சத்திற்கும் மேல் சொத்து சேர்த்துள்ளதாக தெரியவந்தது. இதை தொடர்ந்து, மதுரை சாத்தமங்கலம் விநாயகமூர்த்தி தெருவில் அவர் தங்கியுள்ள வாடகை வீட்டில், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி ராஜேஷ் பிரபு தலைமையில் நேற்று சோதனை நடத்தினர்.

இதேபோல், தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் சுதா தலைமையிலான போலீசார் பாளையங்கோட்டை அன்பு நகரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு பல மணிநரம் நடந்த சோதனையில், வீட்டில் இருந்து பல ஆவணங்களையும் கைப்பற்றி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!