நெருக்கடியில் குறு சிறு நடுத்தர தொழில்கள்: மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம்
மதுரையின் நெருக்கடியில் குறு சிறு நடுத்தரத் தொழில்கள் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படுவது தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் சு .வெங்கடேசன் எம்.பி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார் .
நாடு முழுவதும் உள்ள 170க்கும் மேற்பட்ட குறு ,சிறு நடுத்தர தொழில் அமைப்புகள் எல்லா மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளன.இது குறித்து விவாதிப்பதற்கான நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான அதற்கான அறிவிப்பை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தந்துள்ளார்.
கச்சா பொருள் விலை உயர்வு குறு, சிறு நடுத்தர தொழில்களுக்கான கச்சாப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது.உருக்கு ,தாமிரம் ,அலுமினியம் விலை கடந்த ஒரு ஆண்டில் 40 லிருந்து 150 சதவீதம் வரை உயர்ந்து உள்ளன.இது குறு சிறு நடுத்தர தொழில்களை மிகவும் கடுமையாக பாதித்துள்ளன. எனது மதுரை தொகுதியில் உள்ள குறு, சிறு நடுத்தரத் தொழில்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் . மடீசியா அமைப்பு இப் போராட்டத்தில் பங்கேற்கிறது.
.கோயம்புத்தூர் என்ஜினீயரிங் தொழில்கள் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதுமே பாதிப்புகள் பரவியுள்ளன. ஜவுளி தொழில் நூல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளதால், திருப்பூர், ஈரோடு போன்ற தொழில் நகரங்கள் லட்சக்கணக்கான வேலை இழப்புகளை எதிர்நோக்கியுள்ளன. என்ன செய்ய வேண்டும். கச்சாப் பொருட்களின் விலை உயர்வு அரசின் உறுதியான தலையிட்டால் கட்டுப்படுத்தப்பட வேண்டும் .
விலை நிலைமைகளை கண்காணிக்கவும் இறக்குமதிகள் குறை மதிப்பீடுகளுக்கு ஆளாவதை கண்காணித்து தடுக்கவும் அமைப்பு ரீதியான ஏற்பாடு வேண்டும் என்று குறு சிறு நடுத்தர நிறுவனங்களின் அமைப்புகள் கூறுகின்றன .இது பெருமளவும் வேலை இழப்புகளையும் ரூபாய் மதிப்பின் நிலை தன்மையையும் பாதிக்கக்கூடிய அபாயத்தையும் உள்ளடக்கிய பிரச்சனையாகும். இத்தகைய மிக மிக முக்கியமான பிரச்னை மீது அவசர விவாதம் நடத்தி தீர்வு காண வேண்டியுள்ளது. இதற்கான ஒத்திவைப்பு தீர்மானத்தை அறிவிப்பை சு .வெங்கடேசன் எம்.பி தந்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu