இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும் உதவிகள் செய்ய நடவடிக்கை:அமைச்சர் பழனிவேல் ராஜன்
மதுரை ஆனையூர் பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் உள்ள சுமார் 72 குடும்பங்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தமிழக வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் நிதித்துறை அமைச்சர் பி.டி. ஆர் .பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர், நிதி அமைச்சர் பி.டி.ஆர் .பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், நிதி அமைச்சராக இருப்பதால் 10 லட்சத்திற்கும் மேல் உள்ள கோப்புகளை நான் பார்த்து ஒப்புதல் வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் 30 கடந்த நாட்களில் இலங்கை தொடர்பான 25 கோப்புகளில் கையெழுத்திட்டேன். அதில், கல்வி ,தொழில் முனைவோர் உள்ளிட்ட எல்லா கோப்புகள் வந்தன இந்திய குடியுரிமை உள்ளவர்களுக்கு கிடைக்கும் அனைத்தும் சமமாக இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசால் செய்யப்பட்டு வருகிறது.
எனது துறை அதிகாரிகளுக்கு இலங்கை தமிழர் மறுவாழ்வு மையம் குறித்தும் தமிழ்நாடுஅரசால் என்னென்ன திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது போன்ற தகவல்களை சேமித்து வைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளேன். முகாமில் உள்ள வீடுகள் சீரமைக்கப்பப்பட வேண்டியுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இலங்கை தமிழர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக முதல்வர் செய்வார் என்று கூறினார்.
அண்மையில் கொழும்பிலுள்ள தூதரை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அப்போது இலங்கையில் உள்ள இலங்கை தமிழர்களுக்,கு இங்கிருந்து என்ன உதவிகள் செய்ய முடியுமோ அந்த உதவிகளை செய்ய தமிழக முதல்வர் தயாராக இருப்பதாக கொழும்பு தூதரிடம் கூறினேன். அவரும், கண்டிப்பாக இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். எனவே, இலங்கை தமிழர்களின் நலனில் அரசு எப்போதும் அக்கறையுடன் செயல்படும் என்றார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu