மாநகராட்சி தினக்கூலி பணியாளர்கள் வேலை நிறுத்தம் குப்பை காடான மதுரை
தினக்கூலி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக குப்பை மேடாகக் காட்சியளிக்கும் மதுரை மாநகரம்
மதுரை மாநகராட்சி வரம்புக்குள் உள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று துாய்மை பணியாளர்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும் என மேயர் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று துவங்கிய வேலை நிறுத்தத்தில் சி.ஐ.டி.யூ. தமிழ்நாடு சுகாதார, வி.சி.க., துப்புரவு தொழிலாளர் மேம்பாட்டு சங்கத்தினர் 3000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். மாநகராட்சி கழிவு நீரேற்று நிலையத்தில் விஷவாயு தாக்கி 3 பணியாளர்கள் பலியாக காரணமான அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
நிரந்தர பணியாளர்களுக்கு 7வது ஊதிய குழுவின் பண பலன்களை வழங்க வேண்டும். கொரோனா நிவாரணம் ரூ.15,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.இந்த வேலை நிறுத்தத்தால் நகரின் பல தெருக்களில் 350 டன்னுக்கும் மேற்பட்ட குப்பை குவிந்ததால் துர்நாற்றம் தாங்க முடியவில்லை. பொறியியல் பணிகளும் பாதித்தது.சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'கமிஷனருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வேலை நிறுத்தம் தொடரும்.இதனால் நாளென்றுக்கு 7,000 டன் குப்பை அகற்றப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது' என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu