மதுரை ஆவினில் 6 வகை பால் பொருள்கள் உற்பத்தி நிறுத்தம்: பொதுமக்கள் அவதி

மதுரை ஆவினில் 6 வகை பால் பொருள்கள் உற்பத்தி நிறுத்தம்: பொதுமக்கள் அவதி
X
மதுரை ஆவின் பால் பண்ணையில் பால் வரத்து குறைந்ததால், நெய் மற்றும் வெண்ணெய் உட்பட 6 வகையான பால் பொருள்கள் உற்பத்தி முடங்கியது.

மதுரையில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பால் வரத்து குறைந்ததால், நெய் மற்றும் வெண்ணெய் உட்பட 6 வகையான பால் பொருள்கள் உற்பத்தி முடங்கியது.இதனால் ஆவின் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகினர்.

மதுரை: மதுரையில் கடந்த 1967ஆம் ஆண்டு முதல் 39 ஏக்கர் பரப்பளவில் ஆவின் பால் பண்ணை இயங்கி வருகிறது. இங்கிருந்துதான் தென்மாவட்டங்களுக்கு பால் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. மதுரை ஆவினில் பொது மக்களின் பயன்பாட்டுக்காக பால் உள்பட 10 வகையான பொருள்களை தயாரித்து விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

இந்நிலையில் கோடைகாலம் என்பதால் பால் வரத்து குறைந்துள்ளது. இதனால் நெய், வெண்ணை, பால் பவுடர், பால்கோவா உள்ளிட்ட ஆறு வகையான பொருள்கள் தயாரிப்பு முடங்கியுள்ளது. இதன் காரணமாக மதுரை ஆவினில் இருந்து, மதுரை மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 140 பாலகங்களுக்கு நெய் உட்பட 6 வகையான பொருள்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆவின் விற்பனை மையங்களில் நெய் மற்றும் ஆவின் பொருள்கள் கிடைக்காததால், ஆவின் வாடிக்கையாளர்கள் பெரிதும் அவதி அடைந்துள்ளனர். விரைவில் ஆவின் பொருள்கள் உற்பத்தியை தொடங்கி, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!