மதுரை அருகே 25 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் கைது

மதுரை அருகே 25 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் கைது
X

கைது செய்யப்பட்ட வனப்பேச்சி.

மதுரை அருகே 25 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், சேடபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காளப்பான்பட்டி ஏரியாவில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட தனிப்படையினர் மற்றும் காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த பேரையூர் தாலுகாவை சேர்ந்த வனப்பேச்சி (42/22) W/O ரவிச்சந்திரன் என்பவரை கைது செய்தனர்.

மேலும் இது சம்பந்தமாக சேடப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரி கைது செய்யப்பட்டனர் அவர்களிடமிருந்து கஞ்சா 25 கிலோ. இதன் மதிப்பு ரூபாய் 3,00,000/- மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனமும் (மாருதி கார்) பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.

சமுதாய சீர்கேட்டை விளைவிக்கும் வழியில் பெண்கள் இறங்கியுள்ளது தமிழகத்தில் அதிகமாக தற்போது உள்ளது.

இளைஞர்களை கஞ்சா போதைக்கு அடிமையாகும் தொழிலை பெண்கள் செய்வது பெரும் வருத்தத்தை அளிப்பதாக தமிழக சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

பிள்ளைகளை நல்வழிப்படுத்தும் குணம் கொண்டவள் பெண். ஆனால் சமுதாயத்தில் சீர்கேட்டை விளைவிக்கும் தொழிலை செய்துவருவது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் கூறுகையில், பெண்கள் போதை பொருட்களை விற்பது மதுரை மாவட்டத்தில் பரவலாக உள்ளது.

ஆனால் இதை கருத்தில் கொண்டு என் தலைமையிலான தனிப்படை போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி கைது நடவடிக்கை மேற்கொண்டு அவர்களுக்கு சமூக விழிப்புணர்வு குறித்த கருத்துக்களையும் பதிவு செய்து வருவதாகவும் கூறினார்.

மேலும் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்கி வருவதாகவும் கூறியுள்ளார் .

பெண்கள் நாட்டின் கண்கள் அதனை கருத்தில் கொண்டு இது போன்ற குற்றச் செயல்களை தவிர்ப்பது நல்லது என அறிவுறுத்தியுள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!