ஒப்பந்தம் வழங்கியதில் 1.38 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு: சிபிஐ வழக்குப்பதிவு

ஒப்பந்தம் வழங்கியதில் 1.38 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு:  சிபிஐ வழக்குப்பதிவு
X
கமிஷன் பெற்று ஒப்பந்தம் வழங்கி அரசுக்குவருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக மீது சிபிஐ போலீசார் வழக்கு பதிவு

கமிஷன் பெற்று அரசுக்கு 1.38 கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையர் துணை பொது மேலாளர் மற்றும் ஒப்பந்த நிறுவனங்கள் மீதும் சிபிஐ போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மதுரை முதல் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை என். ஹெச் .(49) மற்றும் தஞ்சை முதல் புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் (229) கடந்த 2014 முதல் 2017ஆம் ஆண்டு வரை பணிகள் நடந்தன.இந்த பணிகளுக்கான ஒப்பந்த நடவடிக்கைகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆணையம் தெலங்கானாவை சேர்ந்த கே. என். ஆர் .கன்ஸ்ட்ரக்ஷன் சென்னையை சேர்ந்த காயத்ரி எஸ் .பி .எல் நிறுவனம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு பணிகளுக்கான ஒப்பந்தங்களை கொடுத்தது.பணிகளுக்கான மொத்த ஒதுக்கீட்டு தொகையில் 5 சதவீதத்தை கமிஷனாக தர வேண்டும் என்ற அடிப்படையில் இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக அப்போது புகார்கள் எழுந்தன.

இந்த புகார்களின் அடிப்படையில் வழக்குப் பதிந்து சிபிஐ போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த பணிகளுக்கு 5 சதவீத கமிஷன் பெற்று அனுமதி கொடுத்ததால் அரசுக்கு ஒரு கோடியே 38 லட்சத்து 90 ஆயிரம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.என கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து அரசுக்கு பெரும் தொகை இழப்பீட்டை ஏற்படுத்தியதாக தேசிய நெடுஞ்சாலை துணை பொது மேலாளர் முத்துடையார் மீதும் மற்றும் ஒப்பந்த நிறுவனங்களான தெலங்கானாவை சேர்ந்த கே. என் .ஆர் .கன்ஸ்டிரக்ஷன், சென்னையை சேர்ந்த காயத்ரி எஸ் .பி .எல் நிறுவனத்தை சேர்ந்த 4 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் சிபிஐ போலீசர் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர்.இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Tags

Next Story