மதுரை போக்குவரத்து துறை சார்பாக தடுப்பூசி முகாம்

மதுரை போக்குவரத்து துறை சார்பாக தடுப்பூசி முகாம்
X
மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து துறை சார்பாக கோவிட் தடுப்பூசி முகாம்

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் சிங்காரவேலன் தலைமையில் சுமார் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 45 வயதிற்கு உட்பட்ட 500 பேரும் 45 வயதுக்கு மேற்பட்ட 500 பேரும் மொத்தம் ஆயிரம் பேருக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது

இதில் போக்குவரத்து வாகன ஆய்வாளர் C.செந்தில்குமார், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அன்பு நிதி மற்றும் போக்குவரத்து துறை அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் போக்குவரத்து துறை ஊழியர்கள் மற்றும் தனியார் டிராவல்ஸ் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் கலந்துகொண்டு, நீண்ட வரிசையில் நின்று தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.

Next Story