கனடா நாட்டுக்கு தப்பிக்க முயன்ற இலங்கையைச் சேர்ந்த 23 பேர் மதுரையில் கைது
கனடா நாட்டுக்கு தப்பிக்க முயன்றவர்கள்
மங்களுர் வழியாக கனடா நாட்டுக்கு தப்பிக்க, முயன்ற இலங்கையைச் சேர்ந்த 23 பேர் மதுரையில் கைது செய்யப்பட்டனர்.கண்டுகொள்ளாத தமிழக உளவுத் துறையினர்
இலங்கையைச் சேர்ந்த இளைஞர்கள் உட்பட சிலர் கனடா நாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டனர். ஆனால், கனடா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு எளிதில் செல்ல முடியாத நிலையில் கடும் கெடுபிடி இருப்பதால் வேறு வழியின்றி, அந்த இளைஞர்கள் மதுரை வழியாக கனடாவுக்கு தப்பிக்க முடிவெடுத்தாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர்கள் மதுரை மாவட்டத்திலுள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த சிலரை அணுகியபோது, மதுரைக்கு வந்தால் இங்கிருந்து கள்ளத் தோணி மூலம் கனடாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வதாக அவர்கள் உத்தரவாதம் அளித்துள்ளனர்
இந் நிலையில், இலங்கையைச் சேர்ந்த திருமகன், சுகந்தன், ஸ்ரீகாந்தன், கபிலன் தினேஷ் உள்ளிட்ட 23 பேரும் கள்ளதோணி மூலம் கடந்த 40 நாட்களுக்கு முன்பு, தூத்துக்குடி வழியாக மதுரை வந்துள்ளனர்.அவர்கள் திருமங்கலம் கப்பலூர் பகுதியிலுள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளனர். தொழிலாளர்கள் போர்வையில் இருந்து கொண்டு கனடாவுக்கு தப்பிக்க, அவர்கள் முயற்சிப்பது குறித்து மதுரை மாவட்ட கியூ பிராஞ்ச போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதைத் தொடர்ந்து , கப்பலூர் பகுதியை கியூ பிராஞ்ச் ஆய்வாளர் சண்முகம் போலீஸார் தீவிரமாக கண்காணித்தனர். நேற்று திருமகன் உள்ளிட்ட 23 பேரையும் கியூ பிராஞ்ச் போலீ ஸார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், தங்களது நாட்டில் இருந்து கனடாவுக்கு நேரடியாக செல்வதற்கு கெடுபிடி இருப்பதால் மதுரையில் இருந்து தூத்துக்குடி வழியாக தப்பிக்கலாம் என்ற முயற்சித்தாகவும், இங்கு வந்தபின் அதற்கான முயற்சியில் தாமதம் ஏற்பட்டதால் கப்பலூர் பகுதியில் ஒரு கம் பெனியில் வேலை பார்த்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, 23 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து, மதுரை 3 வது மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைத்ததாக கியூ பிராஞ்ச் போலீஸார் தெரிவித்தனர்.
கண்டுகொள்ளாத தமிழக உளவுத் துறையினர்.
இதே போல கடல் வழியாக கனடா செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த 38 பேர் மங்களுரில் கியூ பிராஞ்ச் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு வழியாக பெங்களூரு வந்து பின்னர் மங்களூருக்கு வந்துள்ளார்கள். அவர்களுக்கு உதவி செய்த 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்து கண்டுகொள்ளாத தமிழக உளவுத் துறையினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu