தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு பிரதமரே பொறுப்பு-திருமாவளவன்

தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு பிரதமரே பொறுப்பு-திருமாவளவன்
X

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டிற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மதுரையில் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அரக்கோணம் இரட்டைகொலையில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். பாமக ஜாதி அரசியலை முன்னெடுக்கிறது.இந்தியா முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உலகிலேயே இந்தியாவில் கொரோனாவுக்கு தடுப்பூசி தயாரிக்கப்பட்டு இப்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் மாேடி பொறுப்பு ஏற்கவேண்டும்.

பிரதமரின் நேற்றைய உரை பொதுமக்களுக்கு அலங்கார உரையாக தான் இருந்தது.போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் முகவர்களுக்கு முறையான தகவல்களை தர வேண்டும் என தொல் திருமாவளவன் கூறினார்.

Tags

Next Story
why is ai important to the future