மதுரை ரயில்வே மருத்துவமனையில் ரூ.50 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்: அமைக்கும் பணி தீவிரம்

மதுரை ரயில்வே மருத்துவமனையில் ரூ.50 லட்சத்தில்  ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்: அமைக்கும் பணி தீவிரம்
X

மதுரை ரயில்வே மருத்துவமனையில் ரூ 50 லட்சம் மதிப்பில்  ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்.

மதுரை ரயில்வே மருத்துவமனையில் ரூ 50 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாடுமுழுவதும் கொரோனா பரவலின் போது நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு ஆக்சிஜன் லாரிகளை தேவையான இடங்களுக்கு விரைவில் கொண்டு சேர்க்க சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

மேலும் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக ரயில் பெட்டிகளும் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மதுரை ரயில்வே மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டாக உருவாக்கப்பட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரயில்வே பாதுகாப்புப் படையினர் , போலீஸார் மற்றும் ரயில் ஓட்டுநர்கள் உள்ளிட்ட ரயில்வே ஊழியர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மதுரை ரயில்வே மருத்துவமனையில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நிமிடத்திற்கு 250 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரம் நிறுவப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்கானப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவை ரயில்வே மருத்துவ மனையில் இருந்தே பெறப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா இரண்டாம் அலையின்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகம் இருந்ததால் ஏற்பட்ட இழப்புகளை கருத்தில் கொண்டும், இனிவர இருக்கும் மூன்றாம் அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை இந்த உற்பத்தி நிலையத்தின் மூலம் கணிசமாக கட்டுப்படுத்த முடியும் எனவும் கூறப்படுகிறது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil