வாடிப்பட்டி டிராக்டர்கள் வங்கதேசத்திற்கு சென்றது - ரயில்வேயின் சாதனை

வாடிப்பட்டி டிராக்டர்கள் வங்கதேசத்திற்கு சென்றது - ரயில்வேயின் சாதனை
X
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தயாரான டிராக்டர்கள் ரயில் மூலம் வங்கதேசத்திற்கு இன்று கொண்டு செல்லப்பட்டன

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தயாரான டிராக்டர்கள் ரயில் மூலம் வங்கதேசத்திற்கு இன்று கொண்டு செல்லப்பட்டன. மதுரை கோட்டை ரயில்வே இதன் மூலம் ரூ.23 லட்சம் வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் இருந்து இந்தியாவின் மற்றொரு நட்பு நாடான வங்கதேசத்திற்கு நூறு டிராக்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டன. வாடிப்பட்டி ரயில் நிலையத்திலிருந்து 25 புனரமைக்கப்பட்ட சரக்கு பெட்டிகளில் 100 டிராக்டர்கள் வங்காளதேசத்தில் உள்ள பேனா போல் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிதியாண்டில் வாடிப்பட்டி ரயில் நிலையத்திலிருந்து வெளிநாட்டிற்கு செல்லும் முதல் சரக்கு ரயில் இதுவாகும். சென்ற நிதி ஆண்டில் இதுபோல 3 சரக்கு ரயில்கள் வாடிப்பட்டியில் இருந்து வங்காள தேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இப்போக்குவரத்தின் மூலம் மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் 23 லட்சத்து 15 ஆயிரத்து 962 ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story