சித்திரை திருவிழா நடத்த வலியுறுத்தி போராட்டம்

சித்திரை திருவிழா நடத்த வலியுறுத்தி போராட்டம்
X

மதுரையில் பொதுமக்கள் அனுமதியுடன் சித்திரை திருவிழா நடத்த வலியுறுத்தி தமுக்கம் மைதானம் முன்பாக போராட்டம் நடைபெற்றது.

மதுரை சித்திரை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறவுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் அனுமதியின்றி சித்திரை திருவிழா நடத்தப்படும் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோவில், கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவை பக்தர்கள் அனுமதியுடன் நடத்த கோரி மதுரை தமுக்கம் மைதானம் முன்பாக இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் மருதுசேனை அமைப்பை சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தின் போது மாணவர்கள் சிலம்பாட்டம் நிகழ்த்தியபடி கோஷங்களை எழுப்பினர். முன்னதாக தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்தனர். போராட்டத்தையடுத்து அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மருதுசேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணன் பேசுகையில் :தேர்தல் நேரத்தில் பொதுமக்களை கூட்டமாக நடமாட விட்ட நிலையில் தற்போது கொரோனா என கூறி பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாகவும் இதில் ஏதோ சதி நடப்பதாகவும் தெரிவித்தார். சுயநலத்திற்காக அரசு பொதுமக்களை வஞ்சிக்கின்றனர் என்றார்.

Tags

Next Story
ai in future agriculture