முழு ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை

முழு ஊரடங்கு:  வெறிச்சோடிய மதுரை
X
இன்று முழு ஊரடங்கு என்பதால், கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு மக்கள் நடமாட்டமின்றி மதுரை மாநகர் வெறிச்சோடி காணப்படுகிறது

கொரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, போக்குவரத்தின்றி தூங்கா நகர் என்று பெயர் பெற்ற மதுரை மாநகர் வெறிச்சோடி காணப்படுகிறது

நகரின் 30க்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதுடன் ரோந்து பணியிலும் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அவசர கால ஊர்தி தூய்மைப் பணியாளர்கள் ஊர்திகள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இதே போன்று செவிலியர்கள் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன

அரசின் கட்டுபாடுகளை மீறி சாலைகளில் ஆங்காங்கே சுற்றித் திரிபவர்கள் எச்சரித்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். மேலும், அத்து மீறி தேவையின்றி சாலைகளில் வாகனங்களை ஓட்டி வருபவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

தளர்வுகளற்ற முழு ஊரடங்கான இன்று மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.

Tags

Next Story
துணை வட்டாட்சியரிடம் ரூ. 2 கோடி மோசடி..! 3 போ் மீது வழக்குப் பதிவு..!