கொரோனா களத்தில் - "தனிஒருவனாக" மக்கள் பணியில்...
மதுரை மாவட்டத்தில் டீக்கடை நடத்திவரும் ரவிச்சந்திரன் கொரானா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் ரவிச்சந்திரன் டீக்கடை நடத்தி வருகிறார் நாடு முழுவதும் கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வரும் சூழ்நிலையில் அதிகமான மக்கள் இதனால், பாதிப்படைந்துள்ளனர்.
கொரோனா தொற்று முதல் அலையின் போது கிராமந்தோறும் தனது சொந்த மாருதி ஆம்னி காரில் கபசுர குடிநீர், முகக் கவசம் வழங்கியும், ஒலிப்பெருக்கி கொண்டு சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், முகக் கவசங்கள் இன்றி வெளியே வரவேண்டாம் எனவும் என கூறியவாறி விழிப்புணர்வை ஏற்படுத்திய ரவிச்சந்திரன்.ஐந்தாவது வரை மட்டுமே படித்துள்ளார்.
தற்போது பரவி வரும் கொரோனா தொற்று 2 வது அலை ஏற்படுத்தும் வகையில் திருப்பரங்குன்றம் சுற்று வட்டாரத்தில் உள்ள 11 கிராமப்புற பகுதிகளில் காலை, மாலை இருவேளைகளிலும் தனது மாருதி காரில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
அவனியாபுரம் பெரியார் சிலை அருகே போக்கு வரத்து காவல் ஆய்வாளர் தங்கப்பாண்டியன் மூலம் சாலைகளில் வரும் பொதுமக்களுக்கு கப சுர குடிநீர், முக கவசம் வழங்கி மைக் மூலம் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.,
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu