கூடலழகர் கோவில் தெப்பதிருவிழா கொடி ஏற்றம்

கூடலழகர் கோவில் தெப்பதிருவிழா கொடி ஏற்றம்
X

மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோவிலில் மாசி மகம் தெப்ப திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக கொடி ஏற்றம் இன்று சிறப்பாக நடைபெற்றது .

பிரசித்தி பெறற் மதுரை கூடலழகர் திருக்கோயிலில் நடைபெறும் சிறப்பு பெற்ற விழாக்களில் ஒன்றான மாசி மகம் தெப்பதிருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது . விழாவையொட்டி மேளதாளங்கள் முழங்கிட பூஜிக்கப்பட்ட கொடி பல்லக்கில் கொண்டு வரப்பட்டு அலங்கரிக்கப்பட்ட கொடி மரத்தில் கட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது . இதனை தொடர்ந்து மங்கள வாத்தியங்கள், வேத மந்திரங்கள் முழங்கிட கொடி ஏற்றம் சிறப்பாக நடைபெற்றது .

விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் . விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாள் மற்றும் தாயாருக்கு தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.பத்தாம் நாள் திருவிழாவான 26 ம் தேதியன்று ஏகாந்த சேவை பல்லக்கில் தெப்பமுட்டுதல் நிகழ்ச்சியும் , 27 ம் தேதியன்று தங்க சிவிகையில் பெருமாள் புறப்பாடாகி இரவு 7.30 மணிக்கு மேல் உபயநாச்சியாருடன் தெப்பம் சுற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது . விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது .

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!