உதயநிதி நிதானமாக பேச வேண்டும்-செல்லூர் ராஜூ

உதயநிதி நிதானமாக பேச வேண்டும்-செல்லூர் ராஜூ
X

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ (கோப்புபடம்)

உதயநிதி ஸ்டாலின் பேசும் பொழுது நிதானத்துடன் பேசவேண்டும் என அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் தெரிவித்தார்.

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானம் வாயிலில் உள்ள தமிழன்னை சிலைக்கு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அ.தி.மு.க. மாணவர் அணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறும் போது, உதயநிதி ஸ்டாலின் நேற்று பெய்த மழையில் முளைத்தவர்.உதயநிதிக்கு என்ன அரசியல் பின்புலம் உள்ளது. அவருக்கு அரசை பற்றி என்ன தெரியும். உதயநிதி எதைப்பேசினாலும் தெளிவாக பேச சொல்லுங்கள். எடுத்தேன் கவிழ்த்தேன் என அவர் பேச வேண்டாம்.

கொரோனா காலத்தில் முதல்வர் ஊர் ஊராக சென்று கொரோனா கட்டுப்படுத்தினார். உலகத்திற்கே முன்மாதிரியான நடவடிக்கை எடுத்தார்.தேர்தல் குறித்து ஜோசியம் சொல்ல நாங்கள் ஸ்டாலின் இல்லை. நாங்கள் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். மக்கள் தான் எஜமானர்கள். மக்கள் வாக்களித்தால் எங்கள் ஆட்சி அமையும். மக்களின் பல்ஸ் பற்றி எங்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!