ஏழு பேர் விடுதலைக்கு போராட்டம், முகிலன் கைது

ஏழு பேர் விடுதலைக்கு போராட்டம், முகிலன் கைது
X

மதுரையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை விடுதலை செய்ய கோரி நூதன போராட்டம் நடத்திய முகிலன் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை விடுதலை செய்ய கோரி மதுரை மத்திய சிறை முன்பாக முகிலன் தலைமையில் ஏழு புறாக்களை பறக்கவிட்டு 7 தமிழர் விடுதலை கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்ய முற்பட்டதையடுத்து முகிலன் கைதாக மாட்டோம் என்று மத்திய சிறை முன்பு தரையில் அமர்ந்து போராட தொடங்கியதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து அவரை போலீஸார் குண்டுகட்டாக தூக்கிக்கொண்டு வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர்.

Tags

Next Story
ai solutions for small business