நேரடி நெல் விதைப்பில் மதுரை விவசாய கல்லூரி மாணவிகள்

நேரடி நெல் விதைப்பில் மதுரை விவசாய கல்லூரி மாணவிகள்
X

கிராமப்புற விவசாய பணி அனுபவ திட்டத்திற்காக மதுரை வேளாண்மை கல்லூரி மாணவிகள் லாவண்யா, மகாலக்ஷ்மி, நந்தினி, ரா.நர்மதா, த.நர்மதா ஆகியோர் அலங்காநல்லூர் வட்டார வருவாய் கிராமங்களில் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் பங்காக அழகாபுரி கிராமத்தில் விவசாயி கோபிநாத் என்பவரது வயலில் நேரடி நெல் விதைப்பு ( சன்ன ரகம் ஏடிடீ 45) பணியில் ஈடுபட்டனர். பூச்சி கொல்லிகள் மற்றும் செயற்கை உரங்களை தவிர்ப்பதன் மூலம் அதிக மகசூல் பெற்றதாகவும் விவசாயி கூறினார். நேரடி நெல் விதைப்பின் மூலம் நெல் நடவு முறையில் ஏற்படும் செலவுகளை குறைக்க முடியும் என்பதை மாணவிகள் கற்றுகொண்டனர்.

மேலும் நேரடி நெல் விதைப்பில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளவும், களை, பூச்சி மற்றும் பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story
ai automation in agriculture