மக்களின் வாழ்க்கையை தீர்மானிப்பது உள்ளாட்சித் தேர்தல்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

மக்களின் வாழ்க்கையை தீர்மானிப்பது உள்ளாட்சித் தேர்தல்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு
X
எனது தந்தையார் மூலமாக மதுரை அடைந்த வளர்ச்சியை விட அதிகப்படியான வளர்ச்சியை வரக்கூடிய காலங்களில் எட்ட வேண்டும் :அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி கொள்கை மற்றும் செயலளவில் வென்றெடுப்போம்: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்


மதுரையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான மதுரை மாநகர் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலை வகித்தார்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், செயல் அடிப்படையிலும் கொள்கை அடிப்படையிலும் இந்தத் தேர்தலில் முழு வெற்றி பெற வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு. செயல் அடிப்படையில் , நாம் பணியாற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து கழகத் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெளிவான விதிமுறைகளை ஏற்கனவே நடைபெற்ற கூட்டத்தில் அறிவுறுத்தி உள்ளார். அந்த வழிமுறைகளை பின்பற்றி இந்தத் தேர்தலில் அனைவரும் வெற்றியை பெறுவதற்கு பணியாற்ற வேண்டும்.


வாய்ப்பு கிடைப்பவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து அதே நேரத்தில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் கழகத்தின் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு செயலாற்ற வேண்டும். நிச்சயமாக தகவலின் அடிப்படையில் உரிய பொறுப்பை திராவிட முன்னேற்றக் கழகம் அவர்களுக்கு அளிக்கும். மதுரை மாநகராட்சியை நாம் கைப்பற்றியே ஆகவேண்டும். ஏனெனில் மதுரை மாநகருக்கு பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் உதாரணமாக தலைவர் கடந்த வாரம் அறிவித்த படி பல கோடியில் கோவில் உட்கட்டமைப்பு வசதி, சாலைகள், பாலங்கள் என பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற இருக்கிறது. மாமன்ற உறுப்பினர்களை வென்றெடுத்தால்தான் இந்த பணிகளை இன்னும் சிறப்பாக செய்ய முடியும். 1996-2001 காலகட்டத்தில் எனது தந்தையார் மூலமாக மதுரை அடைந்த வளர்ச்சியை விட அதிகப்படியான வளர்ச்சியை வரக்கூடிய காலங்களில் எட்ட வேண்டும் என்பது எனது நோக்கமாகும். மக்கள் வாழ்க்கையை தீர்மானிப்பது உள்ளாட்சித் தேர்தல். அதனை மையமாகக் கொண்டு தான் சாக்கடை, குடிநீர், தெருவிளக்கு வசதி என ஒவ்வொரு திட்டங்களும் மக்களை சென்று சேர உள்ளது. நமது கட்சியை சார்ந்த மாமன்ற உறுப்பினர்கள் வென்றால் மட்டுமே அதன் முழு பயன் கிடைக்கும் என்றார்.



Tags

Next Story