கொள்ளிடம் பாலத்தில் கனரக வாகனங்களை அனுமதிக்கக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு

கொள்ளிடம் பாலத்தில் கனரக வாகனங்களை அனுமதிக்கக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு
X

உயர்நீதிமன்ற கிளை (கோப்பு படம்)

திருச்சி அருகே, கல்லணை கொள்ளிடம் உயர்மட்டப் பாலத்தில், கனரக வாகனங்களை அனுமதிக்கோரி தொடரப்பட்ட வழக்கில், திருச்சி, தஞ்சாவூர் கலெக்டர்கள் பதிலளிக்க, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தில், கனரக வாகனங்கள், டவுன்பஸ்களை இயக்க அனுமதித்து உத்தரவிட வேண்டும் என்று, தஞ்சாவூரைச் சேர்ந்த ஜீவா குமார் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அவர் தனது மனுவில், இந்தப் பாலம் திருச்சி மற்றும் கும்பகோணத்தை இணைக்கிறது. பாலம் பயன்பாட்டுக்கு வந்தாலும், சிறு வாகனங்கள் மட்டுமே செல்வதற்கு அனுமதி தரப்பட்டுள்ளது. மாறாக, கனரக வாகனங்களை அனுமதித்தால் நெல் மற்றும் விவசாயப் பயிர்களை வேகமாக பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்ல இயலும் என்று கூறியுள்ளார்.

மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு, தமிழக தேசிய நெடுஞ்சாலைத்துறை செயலாளர், மற்றும் தஞ்சை, திருச்சி கலெக்டர் பதில் அளிக்க உத்தரவிட்டதோடு, வழக்கை, அடுத்த மாதம் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!