ஊழலுக்கு மாற்று இன்னொரு ஊழல் கட்சி இல்லை-கமல்ஹாசன்

ஊழலுக்கு மாற்று இன்னொரு ஊழல் கட்சி இல்லை-கமல்ஹாசன்
X

ஊழலுக்கு மாற்று இன்னொரு ஊழல் கட்சி இல்லை என மதுரையில் கமல்ஹாசன் கூறினார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மதுரை சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.மதுரை அவனியாபுரம் பேருந்து நிலையத்தில் கமல் ஹாசன் பேசும் போது,எங்களுடன் இருப்பவர்களுக்கு ஏற்கனவே தொழில் இருக்கிறது . அவர்கள் இங்கே மக்களுக்கான கடமையை செய்ய வந்திருக்கிறார்கள். என் எஞ்சிய வாழ் நாட்கள் மக்களுக்காக.

இந்த கூட்டம் காசு கொடுத்து சேர்த்தது இல்லை.வீரத்தின் உச்சக்கட்டம் அகிம்சை. நல்லதை தொடர்ந்து செய்வது என் கடமை. ஊழலுக்கு மாற்று இன்னொரு ஊழல் கட்சி இல்லை. வேலை இப்போது தான் தொடங்கி இருக்கிறது. தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள். தமிழகம் சீரமையும் என கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!