மதுரையில் ரஜினி மன்றத்தினர் 250 பேர் அதிமுகவில் இணைந்தனர்
மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதி சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் மதுரை பெத்தானியாபுரம் அதிமுக மதுரை மேற்கு தேர்தல் அலுவலகத்தில், கூட்டுறவு துறை அமைச்சர் மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜு முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைந்தனர்..
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேசும்போது நடிகர் ரஜினிகாந்த் தொடக்கத்திலிருந்து அன்பும் இரக்கமும் கொண்டவர் ரஜினிகாந்த், எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக, ரஜினிகாந்த்தைதான் எனக்கு ரொம்ப பிடிக்கும். திமுக அவர்கள் ஆட்சிக்காலத்தில் எந்தத் திட்டமும் கொண்டு வரவில்லை.
வட இந்தியாவிலிருந்து ஒருவரை அழைத்து வந்து கோடிக்கணக்கில் செலவு செய்து திமுகவினர் விதவிதமாக விளம்பரம் செய்து வருகிறார்கள் மக்களுக்காக உண்மையாக பணியாற்றினால் மக்கள் யாரும் புறக்கணிக்க மாட்டார்கள் இவ்வாறு அவர் பேசினார்
இதில் மதுரை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளர் எஸ் எம் ரபிக் மற்றும் வி கே ஆர் சேகர் ஆகியோர் தலைமையில் ரஜினி ரசிகர்கள் 250 பேர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர் அவர்கள் 10 சட்டமன்ற தொகுதியில் அதிமுக வெற்றி பெற பாடுபடுவேன் என்று உறுதி அளித்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu