தாமரைக்கு வாக்களித்தால் பிரியாணி சாப்பிடலாம் சீரியல் பார்க்கலாம்: நமீதா

தாமரைக்கு வாக்களித்தால் பிரியாணி சாப்பிடலாம் சீரியல் பார்க்கலாம்: நமீதா
X
தாமரைக்கு ஓட்டுப் போட்டால் பிரியாணி சாப்பிடலாம், சீரியல் நன்றாக பார்க்கலாம் என்று மதுரை பிரசார கூட்டத்தில் நடிகை நமீதா தெரிவித்தார்.

மதுரை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் சரவணன் தொகுதிக்குட்பட்ட சீமான் நகர் பகுதியில் பிரச்சாரம் நடிகை நமீதா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசியதாவது

வேட்பாளர் சரவணன் ட்ரஸ்ட் மூலமாக 20வருடமாக சேவை ஆற்றிவருகிறார், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியுள்ளார். 350 அறுவைசிகிச்சை இலவசமாக செய்துள்ளார்,

ஒன்னுமில்லாத கட்சியில் நிறைய செய்த சரவணன், நம்ம பாஜகவில் இணைந்த சரவணன் இனி மோடி போல உதவுவார், தாமரைக்கு ஓட்டு போட்டால் என்ன லாபம் என தெரிந்துகொள்ளுங்கள் என பட்டியலை வாசித்த நமிதா.

தாமரைக்கு ஓட்டு போட்டால் மத்திய மாநில அரசின் திட்டங்கள் வீடு தேடி வரும், 6சிலிண்டர்கள் தருவேன், பிரியாணி செய்து சாப்பிடலாம், என்னையும் கூட கூப்பிடுங்க ஆனால் வெஜ்டேரியன் பிரயாணி தான் வேண்டும்,

இதேபோல் 1500 ரூபாய் தருவோம், இடம் இல்லாத வங்களுக்கு வீடு கட்டி தருவோம் என்றார், மேலும் வீட்டில் ஒரு நபருக்கு அரசு வேலையும், இலவச வாசிங்மெசின் தர போறோம், ப்ரீ கேபிள் கனெக்சன் தருவோம், உங்களுக்கு பிடித்த பேவரீட் சீரியல் பாத்துகிட்டே இருங்க,

அதனால் அனைவரும் தமாரைக்கு ஓட்டு போடுங்க மதுரையில் தாமரை மலரும் தமிழகம் வளரும், ஓட்டுபெட்டியில் முதல் பட்டனை தான் பயன்படுத்த வேண்டும் அதில் தான் தாமரை இருக்கும் தாமரைக்கு ஒட்டு போடுங்க இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!