மதுரையில் பெய்த கனமழையினால் 1300 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு: விவசாயிகள் கவலை

மதுரையில் பெய்த கனமழையினால் 1300 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு: விவசாயிகள் கவலை
X

சேதமடைந்த பயிர்களை வேதனையுடன் காட்டும் விவசாயி

மதுரையில் பெய்த கனமழை காரணமாக 1300 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் களிமங்கலம், ஓவலூர், குன்னத்தூர் ஆகிய கிராமங்களில் சுமார் 1,500 ஏக்கருக்கு மேலாக விவசாயம் செய்து வருகின்றனர். ஒரு சில நாட்களுக்கு முன்பு பெய்த கோடை மழையால் அப்பகுதியில் சுமார் 1,300 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களில் பயிரிட்ட பயிர்கள் நிலத்தோடு நிலமாக சாய்ந்து எவ்வித பயனும் இன்றி இருக்கிறது.

பாதிக்கப்பட்ட நிலம்

விவசாய நிலத்தில் உள்ள நெல் மற்றும் வைக்கோல் எவ்வித பயனின்றி இருப்பதால், அப்பகுதியில் உள்ள விவசாயிகள் பெரும் பாதிப்பு அடைந்து, என்ன செய்வது என தெரியாமல் இருக்கின்றனர்.

எனவே, நஷ்டமடைந்த விவசாய நிலத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!