இலவச சிலிண்டர் அறிவிப்பால் கோபம் ஏற்படும்-பாலகிருஷ்ணன்

இலவச சிலிண்டர் அறிவிப்பால் கோபம் ஏற்படும்-பாலகிருஷ்ணன்
X

அதிமுகவின் 6 சிலிண்டர் இலவசம் என்ற விளம்பரம் கோபத்தை மக்களிடையே பிரதிபலிக்கும் என்பதை அறியாமல் விளம்பரப்படுத்தி வருகின்றனர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறினார்.

மதுரை மகபூப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். இச்சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியகுழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் மதுரை எம்.பி., வெங்கடேஷன் ஆகியோர் பங்கேற்றனர்.தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது,பாஜக மீது பொதுமக்கள் மத்தியில் வெறுப்புணர்வு அதிகரித்து உள்ளது. குறிப்பாக பெட்ரோல்,டீசல், கேஸ்சிலிண்டர் விலை உயர்வும், கூடுதலாக ரயில் நிலையங்களில் நடைபாதை கட்டணம் ரூ.50 ஆக உயர்த்தி இருப்பது கண்டனத்துக்குரியது.

மோடி அரசாங்கம் தனியார்மயத்தை ஊக்குவித்து வருகிறது. 11 விமான நிலையங்கள் கடந்த 10 நாட்களில் விற்பனைக்கு தயாராகி வருகிறது. அதிமுகவின் தற்போது 6 கேஸ் சிலிண்டர் இலவசம் என்ற விளம்பரம் சிலிண்டர் விலை உயர்வின் கோபத்தை மக்களிடையே பிரதிபலிக்கும் என்பதை அறியாமல் விளம்பரப்படுத்தி வருகின்றனர். பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரிக்க துணை முதலமைச்சரான ஓபிஎஸ் -ன் சொந்த தொகுதியில் செல்ல முடியாத நிலையை பணத்தை வழங்கி சரி செய்து விடலாம் என்று நினைப்பது தவறு. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ai powered agriculture