தீ விபத்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள வைக்கோல் எரிந்து நாசம்

தீ விபத்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள வைக்கோல் எரிந்து நாசம்
X

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வைக்கோல் படப்பில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே யூனியன் ஆபிஸ் சாலை பாலன் நகரை சேர்ந்தவர் திருமலைராஜன் என்பவரது மனைவி மகேஸ்வரி. இவரது வீட்டின் அருகில் வைக்கோல் படப்பு உள்ளது. இந்நிலையில் திடீரென அந்த வைக்கோல் படப்பில் தீப்பிடித்தது உடனே அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதிக காற்றால் தீ வேகமாக பரவியது. இது குறித்து தகவலறிந்த வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி சதகத்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.சேதமடைந்த வைக்கோல் படப்பின் மதிப்பு ரூ.30 ஆயிரமாகும்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!