பெண் ஊழியர் மீது தாக்குதல் : உரிமையாளர் கைது

பெண் ஊழியர் மீது தாக்குதல் : உரிமையாளர் கைது
X
மதுரை அருகே சில்வர் பட்டறை பெண் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய உரிமையாளர் கைது

மதுரை ஒத்தக்கடை பழைய பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்ததவர் பானு26. இவர் சுதந்திரநகர் மூன்றாவது தெருவில் உள்ள முனீஸ்வரன் என்பவருக்கு சொந்தமான சில்வர் பட்டறையில் வேலைபார்த்து வருகிறார். இவர் தன் குடும்பச்செலவுக்காக முனீஸ்வரனிடம் அட்வானஸ் தொகை கேட்டுள்ளார். இதைக் கொடுக்க மறுத்த முனீஸ்வரன் பானுவை தரக் குறைவாக பேசி உருட்டுக் கட்டையால் தாக்கி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பானு ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சில்வர் பட்டறை உரிமையாளர் முனீஸ்வரனை கைது செய்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்