கள்ளக்காதலை கண்டித்ததால் தாய், தங்கையை வெட்டிக் கொலை செய்த பெண்

கள்ளக்காதலை கண்டித்ததால்  தாய், தங்கையை வெட்டிக் கொலை செய்த பெண்
X
மேலூர் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால், தாய் மற்றும் தங்கையை வெட்டிக் கொலை செய்த பெண், கள்ளக்காதலனுடன் கைது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பதினெட்டான்குடி யில் நள்ளிரவில் நேற்று இரவு தாய் நீலாதேவி மற்றும் மகள் அகிலாண்டேஸ்வரி ஆகிய இருவரும் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் நேற்று சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார், மேலும் இது தொடர்பாக மேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரகுபதிராஜா தலைமையில், மேலூர் காவல்துறை ஆய்வாளர் சார்லஸ் உள்ளிட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக நீலாதேவியின் மூத்த மகள் மகேஸ்வரி மற்றும் அவரது கள்ளக்காதலன் கீழவளவை சேர்ந்த சசிகுமார் ஆகிய இருவரையும் மேலூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையின் போது கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மகேஸ்வரியின் தகாத உறவு குறித்து தாய் நீலாதேவி மற்றும் மகேஸ்வரியின் தங்கை அகிலாண்டேஸ்வரி ஆகிய இருவரும் கண்டித்ததாகவும் இதனால் கோபம் அடைந்த, மகேஸ்வரி அவரது கள்ளக்காதலன் சசிகுமார் உடன் சேர்ந்து நள்ளிரவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நீலாதேவி மற்றும் அவரது மகள் அகிலாண்டேஸ்வரி ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடி உள்ளதாக தெரியவந்தது.

கள்ளத்தொடர்பை கண்டித்த தனது தாய் மற்றும் தனது உடன் பிறந்த சகோதரியை ஆள் வைத்து கொலை செய்த மகேஸ்வரியின் இந்த செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!