திமுக, காங்கிரஸ் மக்களை ஏமாற்றுகிறது: பிரதமர் மோடி

திமுக, காங்கிரஸ் மக்களை ஏமாற்றுகிறது: பிரதமர் மோடி
X


திமுகவும், காங்கிரசும் மக்களை ஏமாற்றும் கட்சிகள் என்று பிரதமர் மதுரையில் கூறினார்.

மதுரையில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது,ரூபாய் 100 லட்சம் கோடி கட்டமைப்பு வசதிகளுக்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் தென்தமிழகத்தின் வளர்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது .கடந்த 2009ம் ஆண்டு பட்ஜெட்டை காட்டிலும் இந்த ஆண்டு பட்ஜெட்டில் 238 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அனைத்து கிராமங்களுக்கும் அதிவேக இணையதள வசதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.ஜவுளி துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தில் மட்டும் 7 ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும். ஆனால் திமுக காங்கிரஸ் கட்சிகள் மக்களுக்கு எதுவுமே செய்யாமல் மக்களை ஏமாற்றி வருகின்றன என்று அவர் பேசினார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி