வாக்கு எண்ணிக்கையில் கவனம்: திமுகவினருக்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு உத்தரவு
செய்தியாளர்களிடம் பேசும் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
மதுரை மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள வாக்கு இயந்திரங்களை திமுக வேட்பாளர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தளபதி, பூமிநாதன் உள்ளிட்ட பலர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளரிடம் கூறியதாவது,
ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தான் அரசை நடத்தும் மாண்பு உள்ளது. முன்பெல்லாம் தேர்தல் ஆணையத்தின் மீது மிகுந்த மரியாதை இருந்தது. தற்போது அது குறைந்து வருகிறது.
தேர்தல் நடைபெற்று ஒரு மாத காலம் ஆன பிறகு எண்ணிக்கை நடைபெறுகிறது என்பது வருத்தம் உடைய கருத்தை உருவாக்க கூடிய செயல். மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தலை 8 பாகங்களாக பிரித்து நடத்துவதும், அந்த மாநிலத்தில் தேர்தல் முடியும் வரை இங்கு நடைபெற்ற தேர்தல் அறிவிப்பை வெளியிடாமல் வைத்திருப்பது ஒரு ஜனநாயகத்திற்கு எதிரான செயல். இந்த ஒரு மாத காலமாக வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள இடத்தை கட்சியினர் மற்றும் தோழமை கட்சிகளுடன் கண்காணித்து வருகிறோம்.
பல மாநிலங்களில் ஆளும் கட்சியின் ஏவிஎம் எந்திரங்களை வாகனங்களில் எடுத்துச் செல்லும் அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை நாம் பார்க்கிறோம். எனவே நாங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களை நேரில் சென்று ஆய்வு செய்து எந்த மாதிரியாக வாக்கு எண்ணிக்கை நடத்தப் போகிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்தோம். குறைகளை சுட்டிக் காட்டியுள்ளோம். விண்ணப்ப படிவம் 17 சி அளிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கையும், விண்ணப்ப படிவம் 20-ம் படி எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கையும் தொகுதிக்கு தொகுதி வேறுபாடாக இருந்தது. இதனை சுட்டிக் காட்டிய போதும் அதனை சரி செய்யாமல் விண்ணப்ப படிவம் 17 C விவரத்தையும் வெளியிடாமல் தகவலை நிறுத்தி வைத்தார்கள். இது மிகவும் தவறான செயல்.
எனவே இதுகுறித்து வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள திமுகவினருக்கு, எண்ணிக்கையில் வேறுபாடு வராமல் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இது குறித்து சரியான நடவடிக்கை இருக்கும் என நம்புகிறோம். நேற்று வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பு காட்டிலும் கூடுதலாகவே அதிக இடங்கள் கிடைக்கும். எனவே எந்த முறைகேடும் நடைபெறாமல் இருக்க பார்த்துக்கொண்டிருப்பது எங்கள் கடமையாக உள்ளது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu