பிரதமர் மோடி பங்கேற்கும் பிரச்சார இடத்தை துணை முதல்வர் ஆய்வு

பிரதமர் மோடி பங்கேற்கும் பிரச்சார இடத்தை துணை முதல்வர் ஆய்வு
X

வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ள மதுரை பாண்டி கோயில் அம்மா திடல் பிரச்சார இடத்தை துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

சட்டமன்ற தேர்தலில் மதுரை தொகுதிகளில் போட்டியிடவுள்ள அதிமுக,பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த பிரச்சார பொதுக்கூட்டம் மதுரை பாண்டி கோயில் பகுதியிலுள்ள அம்மா திடலில் நடைபெற உள்ளது.எனவே பிரச்சாரம் நடைபெற உள்ள இடத்தில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அமைச்சர்கள் செல்லூர் ராஜூ,ஆர் பி உதயகுமார் மற்றும் பாஜக சார்பில் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சரவணன்,பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் மற்றும் எம்எல்ஏ.,கள், அதிமுக வேட்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா