ஆ.ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்: உருவபொம்மை எரிப்பு

மதுரை திமுகவின் துணைப் பொதுச் செயலாளருமான முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ ராசா கடந்த 26ம் தேதி அன்று சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது அவர் பேசுகையில் ஸ்டாலின் நல்ல உறவின் மூலம் பிறந்த குழந்தை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கள்ள உறவில் பிறந்த குழந்தை என்று பேசினார். முதல்வரின் தாயாரை அவமிதக்கும் விதமாக பேசிய ஆ.ராசாவை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.
அதன்படி அதிமுக மகளிர் அணி சார்பில் மதுரை மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுகந்தி அசோக் தலைமையில், அவதூறாகப் பேசிய ராசாவை கண்டித்து, மதுரை ஜெயந்திபுரம் பகுதியில் ஜீவா நகரில் அருகில் 100க்கும் மேற்பட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆ.ராசாவின் உருவப்படத்தின் மீது விளக்குமாறால் அடித்து, தீயிட்டுக் கொளுத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அதேபோல் மதுரை மத்திய தொகுதியில் உள்ள மகளிர் அணி சார்பில் ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் திருமலை நாயக்கர் சிலை அருகில் சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் பாண்டிச்சேரி குணசேகரன் மதுரை மாவட்ட அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக மகளிரணி சார்பில் மதுரையில் பல்வேறு இடங்களில் ஆ.ராசாவின் கண்டித்து அவருக்கு எதிரான கோஷங்கள் எழுப்பினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu