மதுரையில் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்தது

மதுரையில் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்தது
X
மதுரை முனிச்சாலை பகுதியில் நூறு வருட பழமையான கட்டிடம் இடிந்து விழுந்தது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் முனிச்சாலை பகுதியில் மிக பழமையான நூறாண்டு கட்டிடம் இருக்கிறது.

நேற்று மதுரை மாநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்த காரணத்தால் இன்று நூறு வருடம் பழமையான வணிக வளாகம் இடிந்து விழுந்துள்ளது. சற்றும் எதிர்பாராத அப்பகுதி வாழ் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் கட்டிடத்தை சுற்றி தடுப்பு வேலி அமைத்து பொதுமக்கள் யாரும் அந்த பக்கம் செல்லாமல் தடுத்து நிறுத்தினர்.

அந்தக் கட்டிடத்தின் உரிமையாளரை காவல்துறையினர் கைபேசியில் தொடர்பு கொண்டு உடனே வாருங்கள் என்று சொன்னபொழுது, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது, என் கட்டிடத்தில் இருப்போர் வழக்குப் போட்டுள்ளனர். ஆகையால், காரணத்தினால் என்னால் எதுவும் செய்ய முடியாது என்று அலட்சியமாக பதில் கூறியுள்ளார்

இது போன்ற பழமையான கட்டிடங்களை ஆய்வு செய்து மதுரை மாநகராட்சி உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்ற உத்தரவு இருந்தும்கூட மதுரை மாநகராட்சி தொடர்ந்து அலட்சியமாக இருந்து வருகிறது

கட்டிடம் இடிந்து விழுந்தபோது, அருகில் யாரும் இல்லாத காரணத்தினால் எந்தவித உயிர் இழப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!