மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை: மதுரை மீனாட்சி மிஷன் சாதனை

மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை: மதுரை மீனாட்சி மிஷன் சாதனை
X
தென்தமிழ் நாட்டில் முதல்முறையாக மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை மதுரை மீனாட்சி மிஷன் சாதனை

மூக்கின் வழியாக உட்செலுத்தப்படும் எண்டோஸ் கோப்பிக் கேமராவின் உதவியோடு மண்டையோட்டின், கீழ் பகுதியில் உள்ள கட்டியை அகற்றும் மூளை அறுவை சிகிச்சையை மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில், தென் தமிழ்நாட்டில் முதல் முறையாக செய்து சாதனை படைத்துள்ளது. நுண் ஊடுருவல் பின் ஹோல் அறுவை சிகிச்சை 41வயதான ஒரு நோயாளிக்கு, இரட்டை பார்வை கோளாறை சரி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து டாக்டர் கே.பகத்சிங் கூறியதாவது, இந்த அறுவை சிகிச்சையின்போது, நரம்பு மண்டல அமைப்பு காயம் ஏற்பட வாய்ப்புள்ளதால், மண்டையோட்டுக்கு உள்ளே செய்யப்படும் அறுவை சிகிச்சை கஷ்டமனதாகும். ஆகவே, மூளையை சுற்றியுள்ள அடர்த்தியான படலத்தில் ஊசி துளையிடுவதின் மூலம் மூளைக்குள் நுழைந்து இந்த அறுவை சிகிச்சையை மருத்துவக்குழு செய்துள்ளது என்றார்.

Tags

Next Story
ai solutions for small business