தாம்பூலதட்டில் மாஸ்க் வழங்கி கொரோனா விழிப்புணர்வு

தாம்பூலதட்டில்  மாஸ்க் வழங்கி கொரோனா விழிப்புணர்வு
X

கொரோனா வைரஸ் தொற்று எதிரொலியாக தாம்பூல தட்டில் வெற்றிலை பாக்குடன் இலவச மாஸ்க் அளித்து தன்னார்வலர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் .

கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை மிகத்தீவிரமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், மதுரை மதிச்சியம் செனாய் நகர் பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்ற தன்னார்வலர் மாஸ்க் அணியாமல் வெளியே சுற்றும் பொதுமக்களுக்கு நூதனமுறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தாம்பூல தட்டில் வெற்றிலை பாக்கு வைத்து இலவச மாஸ்க்குகளை வழங்கி அணிந்து கொள்ள வலியுறுத்தினார்.மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை நுழைவு வாயில், அதனை ஒட்டிய சாலைகளில் மாஸ்க் அணியாத பொதுமக்கள், இளைஞர்கள், முதியவர்களுக்கு இலவசமாக மாஸ்க்குகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!