100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு வாகன பேரணி

100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு வாகன பேரணி
X

மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிக்க கோரி விழிப்புணர்வு வாகன பேரணி நடத்தப்பட்டது.

வரும் சட்டமன்ற தேர்தலில் மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மதுரை மாவட்ட கலெக்டர் அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மூலம் விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியும் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் அன்பழகன் கூறும்போது, மதுரை மாவட்டத்தில் அனைவரும் சுதந்திரமாக வாக்களிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி எளிதாக வாக்களிக்க தேவையான சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் கையில் சானிடைசர் தெளிக்கவும் வெப்பமானி கொண்டு உடல் வெப்ப பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அறிகுறி கண்டறியப்பட்டால் வாக்குப்பதிவு முடிந்த பிறகு தனியாக தேவையான முன்னேற்பாடுகள் செய்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Tags

Next Story