லாரி டிரைவரை தாக்கி பணம் பறித்த திருநங்கைகள்

லாரி டிரைவரை தாக்கி பணம் பறித்த  திருநங்கைகள்
X
மதுரை தல்லாகுளத்தில் தூங்கிக் கொண்டிருந்த லாரி டிரைவரை தாக்கி பணத்தை பறித்த திருநங்கைகள்.

மதுரை ஏப்ரல் 25 தல்லாகுளத்தில் தூங்கிக் கொண்டிருந்த லாரி டிரைவரை இரும்பு கம்பியால் தாக்கி பணம் பறித்த திருநங்கைகளை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் செட்டியபட்டி திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் 47. இவர் லாரி டிரைவர் ஆவார். இவர் மதுரைக்கு வந்தவர் தல்லாகுளம் பெருமாள் கோவில் எதிரே உள்ள காலி இடத்தில் லாரியை நிறுத்தி விட்டு தூங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த இரண்டு திருநங்கைகள் லாரி டிரைவர் சக்திவேலை இரும்பு கம்பியால் தாக்கி அவரிடமிருந்துரூபாய் 5350ஐ பிடுங்கி சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சக்திவேல் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!