முழு ஊரடங்கு மதுரையில் முக்கிய சாலைகள் வெறிச்சோடியது

முழு ஊரடங்கு மதுரையில் முக்கிய சாலைகள் வெறிச்சோடியது
X
முழு ஊரடங்கு அமல்படுத்தப் படுத்தப்பட்டதையடுத்து மதுரையில் சாலைகள் அனைத்து வெறிச்சோடி காணப்பட்டது.

கொரோனா வைரஸ் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் தமிழகத்தில் இன்று 14நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கை பால்,மருத்தகம்,காய்கறி கடை,பழக்கடை,மளிகை கடை,உணவகம் போன்ற அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

மதுரையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோரிப்பாளையம் மாட்டுத்தாவணி பேருந்து அதே போல் பெரியார் ஆரப்பாளையம் ஆகிய இடங்கள் வெறிச்சோடி உள்ளிட்ட முக்கிய சாலைகள் அனைத்து போக்குவரத்தானது குறைந்த அளவிலேயே காணப்பட்டு வருகிறது.

இதனால் பிரதான சாலைகளே வெறிச்சோடிக் காணப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு காவல்துறையினர் ஊரடங்கு பத்தி அறிவுரை கூறி வருகிறார்கள்

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!