கொரோனா காலத்தில் பாசானவர்களுக்கு வேலை இல்லை:சர்ச்சை விளம்பரத்துக்கு வங்கி விளக்கம்

HDFC Bank
X

சர்ச்சையை கிளப்பிய விளம்பரம்

2020-2021 கல்வி ஆண்டில் தேர்வானவர்கள் வங்கியில் பணிபுரிய தகுதி இல்லை சர்ச்சையை கிளப்பிய விளம்பரம் -வங்கி கொடுத்த விளக்கம்

எச்டிஎப்சி வங்கி நிறுவனத்தின் கிளைகளான மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள வங்கிகளில் பணிபுரிவதற்க்காக பட்டதாரிகள் தேவை என இவ்வங்கி நிறுவனத்தின் மற்றொரு கிளையான மதுரை விளாங்குடி கிளை சார்பில் செய்தி தாள்கள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டிருக்குது.

அதில், 2020-2021 கல்வி ஆண்டில் தேர்வானவர்கள் வங்கியில் பணிபுரிய தகுதி இல்லை என குறிப்பிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கல்வி ஆண்டில் இறுதித் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெற்ற நிலையில், மாணவர்களின் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துருக்குது.

இது குறிச்சு பேங்க்-கை தொடர்பு கொண்டு கேட்டபோது 2020-21 கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்களிடம் சான்றிதழ் முழுமையாக கிடைத்திருக்காது என்பதால் அவர்களுக்கு இந்த நேர்முக தேர்வில் வாய்ப்பு அளிக்கவில்லை அப்படீன்னு தெரிவிச்சாய்ங்க

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!