செல்லூர் ராஜூவை ஆதரித்து நடிகை விந்தியா பிரச்சாரம்

செல்லூர் ராஜூவை ஆதரித்து நடிகை விந்தியா பிரச்சாரம்
X
மதுரை சோலை அழகுபுரம் பகுதியில் மதுரை மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூ-வை ஆதரித்து, அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திரைப்பட நடிகை விந்தியா வாக்கு சேகரித்தார்.

மதுரை சோலை அழகுபுரம் பகுதியில் மதுரை மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூ-வை ஆதரித்து அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திரைப்பட நடிகை விந்தியா வாக்கு சேகரித்தார். தொடர்ந்து பிரச்சார அமைச்சர் செல்லூர் ராஜு உடன் வாகனத்தில் இருந்து நடிகை விந்தியா பேசியதாவது,

மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று ஜெயலலிதா கூறினார், தொண்டர்களுக்காக நான் தொண்டர்களுக்காகவே நான் என உங்களை சுற்றி சுற்றி வந்தவர் செல்லூர் ராஜு. அதிமுகவில் அடிமட்ட தொண்டன் சாமானியர் முதல்வராக வந்துள்ளார்.

ஆனால் கலைஞரின் திமுக 1.0 வெர்சன், ஸ்டாலின் திமுக 2.0 வெர்சன், தற்போது உள்ள உதயநிதி ஸ்டாலின் திமுக 3.0 வெர்சன் என்ற நிலையில் உள்ளது. திமுகவில் மன்னார் காலம் போல் வாரிசு அரசியல் நடந்துக்கிட்டு இருக்கு, அப்பா, பையன், பேரன், மனைவி, துணைவி என தொடர்ந்து வந்து கொண்டே இருப்பார்கள், இப்படித்தான் திமுக.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என வாழ்ந்தவர் அண்ணா. கடமை கண்ணியம் கட்டுப்பாடு திமுகவில் காணாமல்போனது.செல் போனில் Google ஐ ஓபன் பண்ணினால் திமுக அட்டாக் பிரியாணி கடை, திமுக அட்டாக் மளிகை கடை, திமுக அட்டாக் ஓட்டல் இப்படி தான் வரும். திமுகவினாலே ரவுடிசம் தான்.

நாடாளுமன்ற தேர்தலில் 39 எம்பிகளை தேர்ந்தெடுத்தீங்க இந்த ரெண்டு வருஷமா மக்களை திரும்பி வந்து பார்த்தாங்களா..? இந்த தேர்தலில் கலர் கலரா டிஜிட்டல் விளம்பரத்துடன் விதவிதமா வருவாங்க, மக்கள் நம்பிடாதீங்க. உங்கள் பகுதியில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்த செல்லூர் ராஜுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Tags

Next Story