/* */

மதுரையில் மார்க்கெட் செயலாளர் மீது நடவடிக்கை, பூ வியாபாரிகள் கோரிக்கை

மதுரை மாட்டுஜேத் தாவணி பூ மார்க்கெட்டில் மார்க்கெட் செயலாளர் தொடர்ந்து, பூ வியாபாரிகளை தன்னிச்சையாக வஞ்சித்து வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பூ வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

மதுரையில் மார்க்கெட் செயலாளர் மீது நடவடிக்கை,  பூ வியாபாரிகள் கோரிக்கை
X

மதுரையில் மலர் வணிகம் மாட்டுத்தாவணி பூ மார்க்கெட், வில்லாபுரம் பூ மார்க்கெட், வலையங்குளம் பூ மார்க்கெட் என மூன்று பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. அதில் மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் கடைகள் கிரைய அடிப்படையில் பத்திர பதிவு செய்து தவணை முறையில் வசூல் செய்யப்பட்டு, தற்போது இவர்கள் முழு கடனையும் கட்டி சொத்துவரி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மலர் மொத்த வணிகர்கள் சங்க செயலாளர் முத்து செய்தியாளரிடம் கூறியதாவது,

மார்கெட்டில் மாதாந்திர பராமரிப்பு கட்டணம் என்ற பெயரில் மார்க்கெட்டில் உள்ள பொது இடங்களை பராமரிக்க மார்க்கெட் கமிட்டி செயலாளராக அரசு தரப்பிலிருந்து டெய்சி ராணி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தனக்கு கீழ் பணிபுரியும் நபர்களை வைத்து மலர் வணிகர்களை மிரட்டி பணம் வசூல் செய்தும் உயரதிகாரிகள் பெயர்களைச் சொல்லி கடைக்கு சீல் வைத்துவிடுவேன் என மிரட்டுகிறார்.

சில கடைகளுக்கு சீல் வைத்துள்ளார். பணியாளர்களை வைத்து அடித்து விடுவேன் என்பதும் மலர் வணிகம் செய்யும் வியாபாரிகளை மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசுகிறார்.

தற்போது கொரோனா தொற்று காரணமாக கோவில்கள், வழிபாட்டு தலங்கள் பூட்டப்பட்டுள்ளது. மேலும் விமான போக்குவரத்தும் சரிவர இல்லாத நிலையில் மலர் ஏற்றுமதி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே உள்ளூர் வணிகர்களை நம்பியே விவசாயிகள் பூக்களை இங்கு கொண்டு வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றி முகக்கவசம் அணிந்து சனிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்து உடல் பரிசோதனை மேற்கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி தொழில் செய்து வருகிறோம்.

ஆனால் மார்க்கெட் கமிட்டி செயலாளர் டெய்சி ராணி அவர் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மூலம் பணம் கேட்டு அடாவடி செய்வதுடன் பணம் தராத கடைக்காரர்களை எந்தவிதமான விளக்கமும் கேட்காமல் கடைகளுக்கு பூட்டி சீல் வைத்து செல்கின்றார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளோம். கடைகளுக்கு பூட்டி சீல் வைக்கும் அதிகாரம் எந்த சட்டத்திலும் இல்லாத நிலையில் இது போன்ற நடவடிக்கையால் நாங்கள் நீதிமன்றத்தை நாடி இதற்கான பரிகாரங்களை தேடிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதுகுறித்து மார்க்கெட் கமிட்டி டெய்சி ராணியை தொலைபேசியில் கேட்டபொழுது வணிகர்கள் கூறும் அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டுகள். முறையாக மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலின் பேரிலேயே நான் செயல்படுகிறேன் என்றார்.

Updated On: 30 April 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  3. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  5. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  6. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  7. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  10. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!