திமுகவில் ஐக்கியமான அதிமுக எம்.எல்.ஏ மதுரையில் பரபரப்பு

திமுகவில் ஐக்கியமான அதிமுக எம்.எல்.ஏ மதுரையில் பரபரப்பு
X
மதுரை மாவட்டம் திருமங்கலம் அதிமுகசட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம், அவர் நேற்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

திருமங்கலம் தொகுதி எம்எல்ஏவும் தற்போதைய அதிமுக அமைப்புச் செயலாளராக உள்ள முத்துராமலிங்கம் நேற்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார், மதுரை விமான நிலையத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து முத்துராமலிங்கம் திமுகவில் இணைந்தார்.

இந்த இணைப்பு நிகழ்ச்சியில் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, கம்பம் செல்வேந்திரன், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கடந்த1996 & 2001. தேர்தலில் திமுக சட்டமன்ற உறுப்பினராக திருமங்கலம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்தார். 2011& 2016 திருமங்கலம் சட்டம் ஒரு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். இந்த சம்பவம் மதுரையில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.






Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!