மதுரையில் 992 வாக்குசாவடிகள் பதற்றமானவை-ஆட்சியர்

மதுரையில் 992 வாக்குசாவடிகள் பதற்றமானவை-ஆட்சியர்
X

மதுரை மாவட்டத்தில் 992 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவித்து,தேர்தல் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்த சூழ்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் ,மதுரை மாவட்டத்தில் தேர்தல் விதி மீறல் நடைபெறாத வகையில் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வீடியோ , ஸ்டேட்டிக், பறக்கும்படை என சட்டமன்ற தொகுதிக்கு தலா மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு இவை சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட உள்ளன.

முறையான ஆவணங்களுடன் கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படாது.தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண் 1950 மற்றும் சி விஜில் ஆப் மூலம் புகார் அளிக்கலாம் .மதுரை மாவட்டத்தில் மொத்தம் 3856 வாக்கு சாவடிகள் உள்ளன.இதில் 992 பதற்றமானவை என்றார்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!