மதுரையில் 72வது குடியரசு தின விழா

மதுரையில் 72வது குடியரசு தின விழா
X

மதுரையில் நாட்டின் 72வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

72வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் தேசியக் கொடியினை மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தொடர்ந்து சமாதானப் புறாக்களை பறக்க விட்டார். முதல்வரின் சிறந்த காவலர்களுக்கான பதக்கங்கள், சான்றிதழ்கள் 149 காவலர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் சிறந்த பணி மற்றும் சமூக சேவைகளுக்கான விருதுகள் 263 நபர்களுக்கு வழங்கப்பட்டது. கொரோனா காரணத்தினால் சுதந்திர போராட்ட தியாகிகள் யாரும் பங்கேற்கவில்லை. இதே போல பள்ளி, கல்லூரி மாணவர்கள் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!