திரையரங்குகளில் 100 சதவீத அனுமதியை எதிர்த்து முறையீடு

திரையரங்குகளில் 100 சதவீத அனுமதியை எதிர்த்து முறையீடு
X

தமிழக திரையரங்குகளில் 100 சதவீதம் ரசிகர்களை அனுமதிப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பொது ஊரடங்கு தளர்வுகளின்படி திரையரங்கில் 50 சதவீத மக்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், அதனை தமிழக அரசு 100 சதவீதமாக்கி உத்தரவிட்டது.இந்த நடவடிக்கையை எதிர்த்து முத்துக்குமார், ராம்குமார் ஆதித்தன் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.கொரோனா காலம் என்பதால் தமிழக அரசின் அறிவிப்பு மத்திய அரசின் பேரிடர் விதிகளுக்கு எதிரானது எனப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!